காலியில் 5 பகுதிகள் முடக்கம்..! முக்கிய தகவல்

கொரோனா அச்சம் காரணமாக காலி மாவட்டத்தில் 5 பிரதேசங்கள் நேற்று மாலை தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி மக்குலுவ, தேதுன்னுகொடை வடக்கு, மிலித்தேவ, எத்திலிகொட தெற்கு மற்றும் தலாப்பிடிய ஆகிய பகுதிகளே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதை அடுத்து குறித்த பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.